Blog Index
The journal that this archive was targeting has been deleted. Please update your configuration.
Navigation
Saturday
May062006

வீட்டை காலி பண்ணிட்டு ...

இரண்டு மாத காலத்துக்குள், இரு முரை வீடு மாற்றம் !!

முதலில், பெரிய வீட்டைவிட்டு சின்ன அபார்ட்மென்ட்டுக்கு , இப்போது புது வீட்டுக்கு !!

பால் காச்சி சாப்பிட்டாச்சு ...மூட்டை முடிச்சோடு போய் உட்கார வேண்டியதுதான் பாக்கி !!

குபர்டீனோவில் புது வீடு.. வீட்டுக்கு போகும் வழியெங்கும் ஆப்பிள் கம்யூடர் அலுவலகங்கள்.

கடந்த ௭ழு வாரத்தில் நான் வாங்கிய திட்டுக்கு அளவே இல்லை !! முடிவில், எல்லோரையும் சந்தோஷப்படுத்தியாச்சு !! இதுவரை நானும் என் மனைவியும், வாழ்கையில் சம்பாதித்தது, சம்பாதிக்கபோவது எல்லாவற்றையும் பணயம் வைத்து ஆப்பிள் நகரம் சென்று அடைந்து விட்டோம் !!

========================

Visithra Version :

irendu maadha kaalaththukkul irendu murai veedu matram

mudhalil periya veetai vittu chinna apartmentukku, ippodhu pudhu veetukku !!

paal kaachchi saapittachchu... mootai mudichchodu poi utkaara vendiyadhudhan bakki !!

Cupertinovil puthu veedu.. veetukku pogum vazhiengum Apple Computer offices.

kadandha ezhu vaaraththil naan vaangiya thittukku alave illai !! mudivil, elloraiyum sandhoshapaduththiyaachu !! idhuvarai naanum en manaiviyum, vaazhkaiyil sambaathithadhu, sambathikkapovadhu ellavaththaiyum panayam vaiththu Apple nagaram sendru adaindhu vittom !!

Saturday
May062006

யார் இந்த குழந்தை ??

நேற்று பூங்காவுக்கு போனோம்..

குழந்தை ஊஞ்சல் ஆடவில்லை , ஆனால் அம்மா அனுபவித்து ஊஞ்சல் ஆடினாள் !!

என்ன திடீர்ன்னு இப்படி குழந்தை மாதிரி ??

கேள்விக்கு மம்மி சொன்ன பதில் :

"எல்லோருக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கு !!!"

====================

Visithra version :

netru poongavukku ponom..

kuzhandhai oonjal aadavillai, aanal amma anubaviththu oonjal aadinaal !!

enna thideernnu ippidi kuzhandhai maathiri ??

kezhvikku mommy sonna badhil :

"ellorukkullum oru kuzhandhai irukku !!!"

Saturday
Jan072006

தாலாட்டு ...

நான் சின்ன குழந்தையாக இருக்கும்போது என் பாட்டி எனக்கு பாட்டு பாடி சாப்பாடு போடுவார்.

அதில் ஒரு பாட்டு

தங்கா தங்கா
தவள தங்கா
உன் ஆம்படயான் உண்ணேனுங்கறான்
கிண்ணி சோத்த தின்னேனுங்கறான்
வாடி தங்கா உன்னுடைய வாகனத்து மேலே !

பாட்டி இந்த பாட்டை பலவிதமாக பாடுவார். இப்போது என் குழந்தைக்கும் இந்த பாட்டை நான் பாடலாம் என்று ஒரு சின்ன ஆசை ! வேர என்னல்லாமோ "Lyrics" ஓட இந்த பாடடை பாடுவயே பாட்டி !! கொஞ்சம் சொல்லேன் என்று கேட்ட போது பாட்டிக்கு மறதி ஜாஸ்தியாகிவிட்டது.."ஏதோ பாடுவேன்டா.." என்றார்.

உங்களில் யாருக்காவது இந்த பாட்டு முழுமையாக தெரிந்தால், சொல்லுங்கள் !!

Visithra Version

==============

naan chinna kuzhandhaiyaaga irukkumpothu en paatti enakku paatu paadi saapaadu poduvaar. adhil oru paattu

thanga thanga
thavala thanga
un aambadayaan unnenungaran
kinni soththa thinnenungaran
vaadi thanga unnudaya vaaganathu mele..

paati indha paattai pala vidhamaaga paaduvar. ippodhu en kuzhandhaikkum indha paatai paadi saappadu podalame endru oru chinna aasai! Vera ennallaamo "lyrics"oda indha paata paaduvaye paati , konjam sollen . endru kettapodhu, paattikku maradhi jaasthiaagivittathu.. "edho paaduvenda" endrar..

ungalil yaarukkavadhu indha paatu muzhumayaaga theriyum endral konjam sollungal (lyrics) !!

Saturday
Jan072006

வாக்களிக்கும் உரிமை !!

அண்மையில் பிரதமர் மன்மோஹன் சிங் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு வாக்களிக்கும் உரிமை தரப்போவதாக கூறியிருக்கிறார் !!

13 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழ்ந்து வரும் எனக்கு ஒரே சந்தோஷம் !! இந்திய குடிமகனான எனக்கு, அமெரிக்காவில் வாக்களிக்கும் உரிமை கிடையாது. நானும் இந்த உலகில், கஷ்டப்பட்டு வேலை செய்கிறேன், வருமான வரி செலுத்துகிறேன், வாழும் சமுதாயத்தில் நடக்கும் மாறுதல்களிலும், எதேனும் ஒரு நாட்டில் பங்கேற்க ஆசைபடுகிறேன் !!

இதில் சோகமான விஷயம் என்ன தெரியுமா ? என் 18'ஆவது வயது முதல் எனக்கு ஓட்டு போட ஒரே ஒரு வாய்ப்பு தான் கிடைத்தது ! அது சந்திரசேகர் பிரதமரான வருடம் !! இந்திய அரசியல் பரிதாபத்துக்குரிய நிலமையில்தான் இருந்தது .. அப்போது அதிர்ஷ்டவசமாக (?) நான் தேர்தலின் போது சென்னையில் இருந்தேன். வாக்களிக்க என் தாத்தா பாட்டி, மாமா மாமி, சித்திகள் எல்லோறும் கும்பலாக கிளம்பிவிட்டார்கள். நான் அரைமணி நேரம் தாமதமாக சென்றேன். பூத் வாசலில் உட்கார்ந்து இருந்த இரண்டு பேர்
"நீ ஏற்கனவே ஓட்டு போட்டாச்சு பா !" என்றார்கள். "என்ன சார் விளையாடறீங்க ! இப்போதான் வரேன். கை நகத்துல மை இல்லை பாருங்க !!" என்று சொன்னேன். அந்த இருவரும் ரவுடிகள் போலதான் இருந்தார்கள். அதில் ஒருத்தன், "ஏய்.. நாங்க, நீ ஏற்கனவே ஓட்டு போட்டுட்டன்னு சொன்னா, நீ ஓட்டு போட்டுட்ட, தெரிதா ? மரியாதயா வம்பு கிம்பு பண்ணாம இட்த்த காலி பண்ணு ! என்ன, சொன்னது தெரிதா ? " என்று சொன்னான். வேருயாரும் அப்போது எனக்கு சாதகமாக பேச அந்த பூத்தில் இல்லாததால், நான் நிராசயுடன் வீடு திறும்பினேன். தாத்தாவிடம் சென்று அழுதேன். அவர் "இதுக்கு தான் எங்களோடயே வாடான்னு சொன்னேன் !! இப்போ எல்லாம் கும்பலா போனாதான்டா ஓட்டு போட முடியும். அங்க போய் அந்த ரவுடி பசங்களோட சண்டைபோட்டா ஒண்ணும் நடக்காது !! அடுத்த எலக்ஷ்ன் வரை பொருமையா இரு !!"

அடுத்த தேர்தல் போது நான் அமெரிக்கா வந்துவிட்டேன். ஈராக்கில் உள்ள அமேரிக்கர்கள் 5000-6000 பேர் ஓட்டு போட வேண்டும் என்பதற்காக ஓட்டு சீட்டுகளையோ, ஓட்டு பதிவு செய்யும் மஷீன்களையோ ஈராக்குக்கே அனுப்ப பல கோடி டாலர்கள் செலவு செய்தார்கள் !! அவர்கள் வாக்குக்கு அவ்வளவு மதிப்பு !! எனக்கு பொறாமையாக இருக்கும்.

இப்போது நம் நாடும் ஓட்டுரிமை விஷயத்தில் முன்னேறுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.

=========
Visithra Version :

anmayil pradhamar Manmohan Singh, veli naatil ullavarukku vakkurimai (voting rights) tharappovadhaga ariviththullar !

13 aandugalaaga americavil vaazhndhu varum enakku ore sandhosham !! India kudimaganaana enakku Americavil vottu podum urimai kidayaadhu. naanum indha ulagil kashtappattu uzhaikkiren, varumaana vari kattugiren, vaazhum samudhayaththil nadakkum maarudhalgalil, edhavadhu oru naatil pangerkka virumbugiren .

idhil sOgamaana vishayam enna theriyuma ? en 18aavadhu vayadhu mudhal enakku vote poda ore oru sandharpam dhan kidaiththadhu. Chandrashekar pradhamar aana varusham adhu. india arasiyal paridhabaththukku uriya nilamayil irundhadhu..appodhu adirshtavasamaaga (?) naan therdhalinpodhu chennaiyil irundhen. vaakalikka en thatha paati, mama mami, chittigal ellarum gumbalaaga kilambivittargal. arai mani neram thaamadhamaaga sendren.booth vaasalil utkaarndhu irundha rendu per "nee erkanave vote pottachchu paa !" endrargal. "enna sir vilayaadareenga.. ippo dhan varen. en kai nagaththula kooda mail edhuvum illai paarunga" endru sonnen. avargal iruvarume rowdygal pola dhan irundhargal. adhil oruththan "ei, naanga, nee votu pottachchunnu sonna , nee vottu pottachchu.. theridha ? mariyaadhaya vambu kimbu pannaama edhaththa gaali pannu ! enna, naa sonnaththu theridha ?" endru sonnan. veru yaarum andha boothil enakku saadhagamaaga pesa illaadhadhal niraasayudan veedu thriumbinen. en thathavidam sendru azhudhen. avar "idhukku dhan engaloda votu poda vaanu sonnen. ippo ellam gumbalaa pona dhanda votu poda mudiyu. indha rowdy pasangaloda sandai potta onnum nadakkadhu. aduththa election varai porumaiyaa iru."

aduththa therdhal podhu naan america vandhuvitten. Iraqil ulla americargal 5000-6000 pergal vote podavendum enbatharkkaga vote seetugalaiyo alladhu vote padivu seiyum machinegalayo Iraqukke anuppa pala kodi dollargal selavu seidhargal. avargal voteukku avvalavu madhippu. enakku ore poraamayaaga irukkum.

ippodhu nam naadum votturimail vishayaththil muneeruvadhai paarka magizhchiyaaga ulladhu !!

Sunday
Dec252005

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

போன வருடம், இதே நேரம் சுனாமி செய்தியை கேட்டு அதிர்ந்து போய் இறுந்தோம். அது நடந்து ஒரு வருடம் ஆகிறது !!

இந்த வருடமாவது சுனாமி, நிலநடுக்கம் போன்ற துரதிஷ்டங்கள் இல்லாமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

எங்கள் குடும்பத்தின் சார்பில் உங்கள் அனைவருக்கும், இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!